/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மீண்டும் குடிநீர் கசிவு; சீரமைக்க வலியுறுத்தல்
/
மீண்டும் குடிநீர் கசிவு; சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : பிப் 18, 2025 10:04 PM

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, சர்வீஸ் ரோட்டின் ஓரத்தில் உள்ள குடிநீர் வால்வில் மீண்டும் தண்ணீர் கசிவு ஏற்பட்டுள்ளது.
கிணத்துக்கடவு சர்வீஸ் ரோட்டின் வழியாக, குறிச்சி --- குனியமுத்தூர் பகுதிகளுக்கு செல்லும் கூட்டுக்குடிநீர் திட்ட குடிநீர் குழாய் உள்ளது. போலீஸ் ஸ்டேஷன் அருகே ரோட்டின் ஓரத்தில், நடைபாதையில் அடிக்கடி குழாயில் தண்ணீர் கசிவு ஏற்பட்டு, ரோட்டில் வழிந்து ஓடியபடி இருந்தது. இதை குடிநீர் மற்றும் வடிகால் வாரிய அதிகாரிகள் அவ்வப்போது சரி செய்து வந்தனர்.
தண்ணீர் கசிவை கடந்த முறை சரி செய்த பின், முறையாக குழியை மூடாமல் இருந்ததால் அப்பகுதியில் தண்ணீர் கசிந்து குளம் போல் தேங்கி நிற்கிறது.
பொதுமக்களும் நடைபாதையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. பிளாஸ்டிக் கழிவுகள் ஆங்காங்கே கொட்டி கிடப்பதால், கொசு தொல்லை அதிகரித்துள்ளது. இதே நிலை நீடித்தால் அப்பகுதியில் துர்நாற்றம் வீச வாய்ப்புள்ளது.
எனவே, இந்த தண்ணீர் கசிவை நிரந்தரமாக சரி செய்து இப்பகுதியில் தண்ணீர் தேக்கம் அடையாதபடி, அதிகாரிகள் சீரமைப்பு பணியை மேற்கொள்ள வேண்டும், என, அப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர்.

