ADDED : பிப் 28, 2024 12:02 AM
அ நிறம் | அளவு
பெ.நா.பாளையம்;வீரபாண்டி முத்தமிழ் நகரில் அரசு பள்ளி காம்பவுண்ட் சுவர் அடிக்கல் நாட்டு விழா சமீபத்தில் நடந்தது. வீரபாண்டி பேரூராட்சி தற்காலிக ஊழியர் தினேஷ்குமார், 37, வேன் டிரைவர் மாரிமுத்து, 33, ஆகியோர் இரும்பிலான விளம்பர பலகைகளை ஏற்றிக்கொண்டு அம்மன் நகரில் உள்ள பேரூராட்சி செட்டுக்கு கொண்டு வந்தனர்.
விளம்பர பலகைகளை இறக்கி வைக்கும் போது அருகில் இருந்த டிரான்ஸ்பார்மரில் விளம்பர பலகை பட்டுடிரைவர் தினேஷ் குமார், மின்சாரம் தாக்கி, உயிரிழந்தார். மாரிமுத்து, சிகிச்சை பெற்று வருகிறார்.
