/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேலைவாய்ப்பு முகாம் இன்று நிறைவு பெறுகிறது
/
வேலைவாய்ப்பு முகாம் இன்று நிறைவு பெறுகிறது
ADDED : ஜன 19, 2025 12:23 AM
கோவை : தமிழக அரசின் 'நான் முதல்வன்' திட்டத்தில், 'இன்போசிஸ்' நிறுவனத்தின் வளாக வேலைவாய்ப்பு முகாம், அரசூர் கே.பி.ஆர்., கல்லுாரியில் நடந்து வருகிறது; இன்று (ஜன., 19) நிறைவடைகிறது.
கோவை, திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், நீலகிரி மாவட்டங்களில் உள்ள அனைத்து பொறியியல் கல்லுாரிகளில் இருந்தும், 3,000க்கும் மேற்பட்ட மாணவியர் பங்கேற்கின்றனர். 'இன்போசிஸ்' நிறுவனத்தில் சேர்வதற்கு, திறமையான புதிய பட்டதாரிகளை தேர்வு செய்வதற்காக, இம்முகாம் நடத்தப்படுகிறது.
'இன்போசிஸ்' நிறுவனம் சார்பாக, பெண்களுக்கான முகாம்களாக நடத்தப்படுகிறது. மாநிலம் முழுவதும் உள்ள பொறியியல் பட்டதாரிகளுக்கு, வேலைவாய்ப்பு வழங்குவதோடு, திறமையான மாணவர்களை முன்னணி நிறுவனங்களுடன் இணைக்கும் முயற்சியாக அமைகிறது; இம்முகாம் இன்று (19ம் தேதி) நிறைவடைகிறது என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

