/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு முகாம்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு முகாம்
ADDED : மார் 07, 2024 04:11 AM
உடுமலை : மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம், திருப்பூர் கலெக்டர் அலுவலக குறைகேட்பு கூட்ட அரங்கில் இன்று (7ம் தேதி) நடைபெற உள்ளது.
காலை, 10:30 முதல் மதியம், 3:00 மணி வரை நடைபெறும் இம்முகாமில், அனைத்து கல்வி தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகளும் பங்கேற்கலாம். 35க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்று, தங்களுக்கு தேவையான பணியாளரை தேர்வு செய்கின்றனர்.
முகாமின் ஒருபகுதியாக, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவு, மகளிர் திட்ட அலுவலகத்தின் வேலைவாய்ப்புடன் கூடிய திறன் பயிற்சிக்கான பதிவு; மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் வங்கிக்கடன் குறித்த வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகிறது.

