sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தனியார் துறையில் வேலை வாய்ப்பு; 15 ஆயிரம் பணியிடங்களுக்கு நியமனம்

/

தனியார் துறையில் வேலை வாய்ப்பு; 15 ஆயிரம் பணியிடங்களுக்கு நியமனம்

தனியார் துறையில் வேலை வாய்ப்பு; 15 ஆயிரம் பணியிடங்களுக்கு நியமனம்

தனியார் துறையில் வேலை வாய்ப்பு; 15 ஆயிரம் பணியிடங்களுக்கு நியமனம்


ADDED : ஜூலை 28, 2025 09:34 PM

Google News

ADDED : ஜூலை 28, 2025 09:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கோவையில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் ஆகஸ்ட் 23ம் தேதி நடக்கிறது.

பொள்ளாச்சி பிரதான சாலையில் உள்ள ஈச்சனாரி ரத்தினம் கலை, அறிவியல் கல்லுாரியில் முகாம் நடக்கிறது. உற்பத்தி, ஜவுளி, இன்ஜினியரிங், கட்டுமானம், ஐ.டி., ஆட்டோமொபைல், விற்பனை, மருத்துவம் சார்ந்த 250க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனத்தினர், 15 ஆயிரத்துக்கு மேலான காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.

எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு, தொழில் கல்வி பயின்றவர்கள், செவிலியர்கள், பொறியியல் மாணவர்கள் என, அனைத்து பிரிவினரும் பங்கேற்கலாம். வயது வரம்பு இல்லை. அனுமதி இலவசம். சுய விவரம் மற்றும் கல்விச்சான்று நகல்களுடன் வர வேண்டும். தேர்வு செய்யப்பட்டால், பணி நியமன ஆணை உடனே வழங்கப்படும். அவர்களின் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படாது.

வேலை நாடுவோர் www.tnprivatejobs.tn.gov.in இணையதளத்தில் candidate loginல் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். பங்கேற்க விரும்பும் தனியார் நிறுவனங்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

வேலை தேடுவோர் 0422 2642388, 94990 55937 ஆகிய எண்ணிலும், வேலை அளிப்போர் 93842 38107 என்ற எண்ணிலும் காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை தொடர்பு கொள்ளலாம், என கோவை கலெக்டர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us