/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி
/
மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி
ADDED : செப் 19, 2024 10:22 PM
பெ.நா.பாளையம்: மேட்டுப்பாளையம் ரோடு, வீரபாண்டி அருகே உள்ள சாமநாயக்கன்பாளையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
மாற்றுத்திறனாளிகளுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு மையம் சார்பில் மேட்டுப்பாளையம் ரோடு, வீரபாண்டி, சாமநாயக்கன்பாளையம், காமராஜர் வீதி தோட்ட பகுதியில் உள்ள மையத்தில் தட்டச்சு, மைக்ரோசாப்ட், எம்.எஸ்.ஆபீஸ்., மின் திறன் ஆய்வு, டிஜிட்டல் கல்வி அறிவு ஆகியவை குறித்து, 45 நாட்களுக்கான பயிற்சி வகுப்புகள் வரும், 25ம் தேதி துவங்குகின்றன.
இதில், ஆண், பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம். வயது வரம்பு, 18 முதல், 35 வயது வரை. கல்வி தகுதி, 10ம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படித்திருக்கலாம். இப்பயிற்சி முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.
இதில், செவித்திறன், கண்பார்வை, உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சி குறைபாடு உடையோர் பங்கேற்கலாம். பயிற்சி கட்டணம், தங்குமிடம், உணவு இலவசம் மேலும், தொடர்புக்கு, 99446 97077 என்ற எண்ணை அணுகலாம்.