ADDED : ஜன 20, 2026 05:20 AM

கோவை: டாக்டர் என்.ஜி.பி. தொழில்நுட்பக் கல்லுாரி மற்றும் கலை அறிவியல் கல்லுாரி இணைந்து, என்.ஜி.பி. எம்பவர்மென்ட் விருது விழா நடத்தப்பட்டது. கல்வித் துறையில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கு என்.ஜி.பி. எம்பவர்மென்ட் விருது வழங்கப்பட்டது.
கே.எம்.சி.எச். மற்றும் டாக்டர் என்.ஜி.பி. ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் நல்லா பழனிசாமி தலைமை வகித்தார். மாற்றம் அறக்கட்டளை இணை நிறுவனர் உதயசங்கர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
2025--2026 கல்வியாண்டு கல்வி, விளையாட்டுத் துறைகளில் சிறந்து விளங்கிய, 4,530 மாணவர்களுக்கு ரூ.9 கோடி உதவித்தொகை வழங்கப்பட்டது.
என்.ஜி.பி.ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டாக்டர் தவமணி, அறங்காவலர்கள் டாக்டர் அருண், மதுரா, டாக்டர் என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லுாரியின் முதல்வர் சரவணன், டாக்டர் என்.ஜி.பி.தொழில்நுட்பக் கழகத்தின் முதல்வர் பிரபா பங்கேற்றனர்.
