தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மரங்களுக்கு எதிராக தொடரும் அத்துமீறல்: மேலும் ஒரு மரத்தை வெட்டி சாய்க்க முயற்சி

மரங்களுக்கு எதிராக தொடரும் அத்துமீறல்: மேலும் ஒரு மரத்தை வெட்டி சாய்க்க முயற்சி

மரங்களுக்கு எதிராக தொடரும் அத்துமீறல்: மேலும் ஒரு மரத்தை வெட்டி சாய்க்க முயற்சி


UPDATED : ஜூலை 29, 2026 08:57 PM

ADDED : ஜூலை 29, 2026 08:41 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 29, 2026 08:57 PM ADDED : ஜூலை 29, 2026 08:41 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: பீளமேடு ஹட்கோ காலனியை சேர்ந்த சபரி, தன்னுடைய வீட்டுக்கு முன் கட்டியுள்ள கடைகளுக்கு மேலாக செல்லும் மரக்கிளையை வெட்டுவதற்கு அனுமதி கோரி, வடக்கு தாசில்தார் ஜெயக்குமாரிடம் மனு கொடுத்தார்.

வி.ஏ.ஓ. - ஆர்.ஐ. நேரில் ஆய்வு செய்தனர். கட்டடத்துக்கு மேல் கிளை செல்வதையும், மின் கம்பிகளுக்கு இடையூறாக இருப்பதாகவும் அவர்கள் அறிக்கை கொடுத்தனர்.

மாநகராட்சி, மின்வாரிய ஊழியர்கள் முன்னிலையில் வெட்டுவதற்கு அனுமதியளித்து, தாசில்தார் உத்தரவிட்டார். அதில், மே பிளவர் மரம் என குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், அங்கிருப்பது வாகை மரம். விளாங்குறிச்சி வி.ஏ.ஓ. சரவணம்பட்டி ஆர்.ஐ. உடனிருந்து ஜியோடேக் புகைப்படத்துடன் அறிக்கை அளிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

மரக்கிளைகள் வெட்டும் பணி நேற்று கிரேன் உதவியுடன் நடந்தது. தாசில்தார் உத்தரவில் கூறியபடி, அரசு அதிகாரிகள் யாரும் இல்லை. கட்டடத்துக்கு மேலாக செல்லும் மரக்கிளைகள் மட்டுமின்றி, அனைத்து கிளைகளையும் வெட்டுவதற்கான முயற்சி நடந்தது. தகவலறிந்து கிரீன் கேர் அமைப்பினர் விரைந்து சென்று தடுத்து நிறுத்தினர்.

'அனுமதியின்றி மரங்களை வெட்டிய இருவருக்கு தலா 1 லட்சம் ரூபாய் வீதம் சமீபத்தில் அபராதம் விதிக்கப்பட்டது. இருப்பினும், கடைகளுக்கு முன்பாக இருப்பதால் மரங்களை வெட்டிச் சாய்க்கும் கொடூரம் தொடர்கிறது.

இதுபோன்ற தவறுகள் தொடர்வதால், வி.ஏ.ஓ. மற்றும் ஆர்.ஐ. மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே மற்றவர்களுக்கு பாடமாக இருக்கும்' என கிரீன் கேர் அமைப்பினர் கூறினர்.

கவனிப்பாரா கலெக்டர்? கோவையில் மரங்கள் தொடர்ச்சியாக வெட்டப்படுவது குறித்து, மாவட்ட பசுமை குழு கொள்ளாமல் இருக்கிறது. வருவாய்த்துறை அதிகாரிகள், தங்கள் இஷ்டத்துக்கு அனுமதி அளிக்கின்றனர். மாவட்ட கமிட்டி தலைவரான கலெக்டர் பவன்குமார், இவ்விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த சூழல் ஆர்வலர்கள் விரும்புகின்றனர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us