/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மழைநீர் செல்லும் பாதையில் ஆக்கிரமிப்பு
/
மழைநீர் செல்லும் பாதையில் ஆக்கிரமிப்பு
ADDED : ஜூலை 09, 2025 10:18 PM
கோவில்பாளையம்; கொண்டையம் பாளையம் ஊராட்சி, ஆறுவ செட்டிபுதூரில், மயானம் மற்றும் கவுசிகா நீர்வழிப் பாதை ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி உள்ளது. இதனால் இறுதி சடங்கு செய்ய மயானத்துக்கு செல்வோர் சிரமப்படுகின்றனர். கவுசிகா நதிக்கு மழைக் காலங்களில் நீர் வருவது தடைபடுகிறது. மிகக் குறைவாகவே கவுசிகா நதி பள்ளத்தில் நீர் செல்கிறது.
இவ்விரு இடங்களிலும் நில அளவீடு செய்து ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று கூறி கோவை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில்,' தொடர்ந்து ஆறு மாதங்களாக கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் இதுவரை அளவீடு செய்யப்படவில்லை. ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை,' என்றனர்.