ADDED : ஆக 12, 2025 07:49 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குடிமங்கலம்; பெதப்பம்பட்டி நால்ரோட்டில், ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளதால், பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது.
பொள்ளாச்சி - தாராபுரம் மாநில நெடுஞ்சாலை, உடுமலை - செஞ்சேரிமலை ரோடு சந்திப்பு பெதப்பம்பட்டியில் அமைந்துள்ளது.
இந்த சந்திப்பிலுள்ள கடைக்காரர்கள் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து பல்வேறு பொருட்களை வைக்கின்றனர்.
ரோடு வரை, பொருட்களை வைத்து வியாபாரம் செய்வதால், வாகனங்களை நிறுத்த இடம் இல்லாமல் நெரிசல் ஏற்படுகிறது.
இதனால், வாகன ஓட்டுநர்கள் பாதிப்புக்குள்ளாகின்றனர். இப்பிரச்னை குறித்து புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர்.
நெடுஞ்சாலைத்துறைக்குரிய இடத்தை உள்வாடகை விடும் அவல நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க, தாராபுரம் கோட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.