/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'காரமடை நகராட்சியின் அலட்சியத்தால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் உள்ளது'
/
'காரமடை நகராட்சியின் அலட்சியத்தால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் உள்ளது'
'காரமடை நகராட்சியின் அலட்சியத்தால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் உள்ளது'
'காரமடை நகராட்சியின் அலட்சியத்தால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் உள்ளது'
ADDED : ஜன 01, 2026 05:06 AM
காரமடை: காரமடை நகராட்சியில் நகர்மன்ற கூட்டம் நேற்று நகராட்சி தலைவர் உஷா தலைமையில் நடைபெற்றது.
இதில் கவுன்சிலர்கள் பேசியதாவது:-
விக்னேஷ் (பா.ஜ.,)- காரமடை அரங்கநாதர் கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் ஆக்கிரமிப்புக்கள் அதிகரித்துள்ளன. அதேபோல் கோயிலை ஒட்டி உள்ள கோவை - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகள் உள்ளன.
இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கடுமையான சிரமம் ஏற்படுகிறது. நகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் அலட்சியம் காட்டுகிறது.
பிரியா (மா.கம்யூ.,)- குப்பைகள் சரிவர எடுப்பதில்லை. தண்ணீர் விநியோகம் சீராக இல்லை. தூய்மை பணியாளர்கள் மற்றும் வாட்டர் மேன்கள் ஆகியோர்களை அழைத்து, கவுன்சிலர்கள் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும்.
வனிதா (அ.தி.மு.க.,)- ஆர்.வி. நகர் பகுதியில், முறையான வடிகால் வசதி இல்லாததால், சாக்கடை நீர் சாலையில் தேங்கி நிற்கிறது. துர்நாற்றம் வீசுகிறது. பொது மக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. 27 வது பகுதியில் கூடுதல் மின் கம்பங்கள் கேட்டு பலமுறை ஆகிறது. நகராட்சி நிர்வாக அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் இல்லை.
பிற கவுன்சிலர்கள் பேசுகையில், குடிநீர் பற்றாக்குறை உள்ளது. அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தெரு விளக்குகள், சாலை வசதி போன்ற அடிப்படை வசதிகளில் நகராட்சி நிர்வாகம் அதிகம் கவனம் செலுத்த வேண்டும், என்றனர்.
கவுன்சிலர்களின் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என துறை ரீதியான, நகராட்சி நிர்வாக உயர் அதிகாரிகள் பதில் அளித்தனர்.---

