ADDED : அக் 13, 2025 01:20 AM
இஸ்ரேல் - ஹமாஸ் போர்: இது வரை நடந்தது என்ன
2023 அக். 7: காசாவின் ஹமாஸ் பயங்கரவாதிகள், இஸ்ரேலின் தெற்கு பகுதியில் ஏவுகணை வீசி திடீர் தாக்குதல். 1200 பேர் பலி. 250 இஸ்ரேலியர்களை பிணைக்கைதியாக பிடித்துச்சென்றனர். இதைத்தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் பதிலடியை தொடங்கியது.
அக். 8: ஹமாஸ்க்கு ஆதரவாக இஸ்ரேல் மீது லெபனானின் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் தாக்குதல். 32 பேர் பலி. இஸ்ரேலின் பதிலடியில் 646 பேர் கொல்லப்பட்டனர்.
அக். 11: ஹமாஸ் அமைப்பை முற்றிலும் அழிப்பதே இலக்கு என இஸ்ரேல் அறிவிப்பு.
அக். 17: ஹமாஸ் மீதான இஸ்ரேல் தாக்குதலுக்கு ஈரான் எதிர்ப்பு.
நவ. 6: காசாவில் பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது.
நவ. 21: இரு தரப்பும் ஏழு நாள் சண்டை நிறுத்தம் அறிவிப்பு.
டிச. 4: காசாவுக்குள் தரைவழி தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல்.
2024 பிப். 29: இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் நிவாரண உதவி பெற காத்திருந்தவர்களில் 100 பேர் பலி.
மார்ச் 25: போர் நிறுத்தத்தை வலியுறுத்திய தீர்மானம் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேற்றம்.
மே 20: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, பாதுகாப்பு அமைச்சர் யாவ் காலன்ட், ஹமாஸ் தலைவர் யாஹ் சின்வருக்கு கைது வாரன்ட் பிறப்பித்தது சர்வதேச நீதிமன்றம்.
செப். 26: இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா, இப்ராஹிம் உள்ளிட்ட முக்கிய தளபதிகள் பலி.
அக். 18: ஹமாஸ் தலைவர் யாஹ் சின்வர் கொல்லப்பட்டார்.
நவ. 27: லெபனானின் ஹிஸ்புல்லா - இஸ்ரேல் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
டிச. 15: காசாவில் பலி எண்ணிக்கை 45 ஆயிரத்தை தாண்டியது.
2025 ஜன. 19: அமெரிக்காவின் முயற்சியால் இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது.
பிப். 10: இரு தரப்பும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறின. பிணைக்கைதிகளை விடுவிக்க முடியாது என ஹமாஸ் அறிவிப்பு.
மார்ச் 18: பிணைக்கைதிகளை விடுவிக்க கோரி காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்.
ஜூலை 19: பிணைக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் சம்மதம்.
செப். 16: காசாவில், இஸ்ரேல் இனப்படுகொலை நிகழ்த்துகிறது என ஐ.நா., கவலை தெரிவித்தது.
செப். 29: இஸ்ரேல் - காசா போரை முடிவுக்கு கொண்டு 20 அம்ச ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டார். சில அம்சங்களை இரு தரப்பும் ஏற்றன.
அக். 4: காசாவில் பலி எண்ணிக்கை 67 ஆயிரத்தை தாண்டியது.
அக். 13: போர் நிறுத்த ஒப்பந்தம் அதிபர் டிரம்ப் தலைமையில் எகிப்தில் இன்று கையெழுத்தாகிறது.