/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மின்சேமிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளிகளில் ஆற்றல் மன்றம் துவக்கம்

ADDED : மார் 17, 2024 12:25 AM
கோவை:பள்ளி மாணவர்களிடையே மின்சேமிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, பள்ளிகளில் ஆற்றல் மன்றம் துவக்கப்பட்டுள்ளது.
கோவை தெற்கு மின் பகிர்மான வட்டம் மற்றும் மத்திய திறனாக்க செயலகம் சார்பில், மின்சேமிப்பு மற்றும் சிக்கனம் குறித்து, மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாக, ஆசிரியர்களுக்கு பயிலரங்கு நடந்தது.
இதில் பள்ளிகளில், 'ஆற்றல் மன்றம்' உருவாக்குவது குறித்து, கோவை மாநகரில் உள்ள 39 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
டாடாபாத் மின்வாரிய வளாகத்தில் நடந்த கருத்தரங்கில், பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், ஆற்றல் மன்ற ஒருங்கிணைப்பாளர்களாக செயல்படவுள்ளனர்.
இவர்கள், தங்கள் பள்ளியின் ஆற்றல் மன்றங்களை துவக்கி, மாணவர்களிடம் மின்சார சிக்கனம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவர்.
மன்றம் மூலம் மின்சார சேமிப்பு குறித்து பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகளும் நடத்தப்படும்.
ஆற்றல் மன்றத்திற்கென பிரத்யேக வாட்ஸ்ஆப் குழு துவங்கப்பட்டுள்ளது என்றும், இதில் ஆற்றல் மன்றம் மற்றும் மின்சேமிப்பு குறித்த தகவல்கள் பகிரப்படும் எனவும், கோவை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சுப்ரமணியன் தெரிவித்தார்.