/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கற்பகம் கல்வி நிறுவனத்தில் இன்ஜி.,மாணவர் சேர்க்கை
/
கற்பகம் கல்வி நிறுவனத்தில் இன்ஜி.,மாணவர் சேர்க்கை
ADDED : ஆக 19, 2024 10:29 PM

கோவை:ஈச்சனாரி கற்பகம் அகாடமி உயர்கல்வி நிறுவனத்தில், முதலாம் ஆண்டு இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை நடந்தது. கற்பகம் கல்வி நிறுவனங்களின் தலைவர் வசந்தகுமார் தலைமை வகித்தார்.
வசந்தகுமார் பேசுகையில், ''கல்வியைப் போல ஒழுக்கத்தை மாணவர்கள் பேண வேண்டும். பெற்றோர்களை மதிக்க வேண்டும். சரியான வாய்ப்புகளை பயன்படுத்தி, முன்னேற வேண்டும்,'' என்றார்.
தன்னம்பிக்கை பேச்சாளர் சாந்தகுமணி, மாணவர்களிடம் தன்னம்பிக்கையூட்டும் வகையில் பேசினார். கற்பகம் உயர்கல்வி அகாடமியின் பொறியியல் டீன் அமுதா, முதலாமாண்டு மாணவர்களை வரவேற்றார்.
பின், துறை தலைவர்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தினார். பதிவாளர் ரவி, துறைத்தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.