/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரைகுறையாக வீடு கட்டிய இன்ஜினியர் இழப்பீடு தர உத்தரவு
/
அரைகுறையாக வீடு கட்டிய இன்ஜினியர் இழப்பீடு தர உத்தரவு
அரைகுறையாக வீடு கட்டிய இன்ஜினியர் இழப்பீடு தர உத்தரவு
அரைகுறையாக வீடு கட்டிய இன்ஜினியர் இழப்பீடு தர உத்தரவு
ADDED : ஏப் 26, 2025 12:30 AM
கோவை,; வீடு கட்டியதில் சேவை குறைபாடு செய்ததால், இழப்பீடு வழங்க சிவில் இன்ஜினியருக்கு உத்தரவிடப்பட்டது.
கோவை, போத்தனுாரை சேர்ந்தவர் ராமலிங்கம்,67; ஓய்வு பெற்ற வங்கி ஊழியரான இவர், சொந்த வீடு கட்டுவதற்காக, கணபதியை சேர்ந்த சிவில் இன்ஜினியர் ராஜேஸ்வரனிடம்,2021 ஆக., 19ல் ஒப்பந்தம் செய்து கொண்டார்.
மொத்தம், 58 லட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் போட்டனர். ஒன்பது மாதத்தில் வீடு கட்டி முடித்த பிறகு, கூடுதல் செலவாகி விட்டதாக இன்ஜினியர் கூறியதால், மேலும் 8 லட்சம் ரூபாய் கொடுத்தார். கிரகப்பிரவேசம் முடித்து புது வீட்டில் குடியேறிய போது, கட்டுமான வேலை முழுவதும் முடிக்காதது தெரிந்தது.
மீதியுள்ள பணிகளை முடிக்க, ராஜேஸ்வரன் மேலும்ரூ.4 லட்சம் கேட்டுள்ளார். ராமலிங்கம் மறுத்ததால், பணி செய்யாமல் பாதியில் விட்டு சென்றார்.
பாதிக்கப்பட்ட ராமலிங்கம் இழப்பீடு கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில், 'எதிர்மனுதாரர் சேவை குறைபாடு செய்துள்ளதால், மனுதாரருக்கு நான்கு லட்சம் ரூபாய் திருப்பி கொடுக்க வேண்டும். மன உளைச்சலுக்கு இழப்பீடாக, 10,000 ரூபாய், வழக்கு செலவு, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர்.