/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொறியியல் கல்லுாரி மாணவி கட்டுரை போட்டியில் 2ம் இடம்
/
பொறியியல் கல்லுாரி மாணவி கட்டுரை போட்டியில் 2ம் இடம்
பொறியியல் கல்லுாரி மாணவி கட்டுரை போட்டியில் 2ம் இடம்
பொறியியல் கல்லுாரி மாணவி கட்டுரை போட்டியில் 2ம் இடம்
ADDED : பிப் 20, 2025 10:24 PM

பொள்ளாச்சி; தேசிய அளவிலான கட்டுரை போட்டியில், பொள்ளாச்சி பொறியியல் கல்லுாரி மாணவி இரண்டாமிடம் பெற்றார்.
ஸ்ரீராம் சந்திர மிஷன் கல்வி மற்றும் ஆன்மிக சேவை அமைப்பின் ஹார்ட்புல்னஸ் இன்ஸ்டியூட், அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழுவுடன் ஒப்பந்தம் செய்து, கட்டுரை எழுதும் நிகழ்வை நடத்தி வருகிறது.
நடப்பாண்டு ஹார்ட்புல்னஸ் இன்ஸ்டியூட், காமன்வெல்த் நாடுகளுடன் இணைந்து, தேசிய அளவிலான கட்டுரைப் போட்டி 32வது ஆண்டாக நடத்தப்பட்டது.
இந்தியாவில் உள்ள பள்ளி, கல்லுாரிகள் கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டன. 14 - 18 வயது பிரிவு, 19 - 25 பிரிவு என இரண்டு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. அதில், 19 - 25வயதினருக்கான கட்டுரை போட்டியில், எலிசபெத் எட்வர்ஸின் கோட்பாடான முன்பு இருந்ததை விட குறைவான மகிழ்ச்சியை தருவதாக இருந்த போதிலும், புதிய நிதர்சனத்தை ஏற்றுக்கொள்வதே மீள்திறன் என்பதாகும், என்ற தலைப்பில், கட்டுரை எழுதிய பூசாரிப்பட்டியிலுள்ள பொள்ளாச்சி பொறியியல் கல்லுாரி மாணவி கவுரி சங்கரி, தேசிய அளவில் இரண்டாமிடம் பெற்றார். இதற்கான பரிசளிப்பு விழா, கன்ஹா சாந்தி வனத்தில் நடந்தது.
உக்ரைன் நாட்டின் கவுரவ துாதர் ஒலெக்சாண்டர் போலிஷ், மாணவிக்கு பரிசு வழங்கினார். வெற்றி பெற்ற மாணவிக்கு கல்லுாரி நிர்வாகத்தினர் பாராட்டு தெரிவித்தனர்.
'மாணவர்கள் சுய பரிசோதனை செய்து, திறனை ஊக்குவிக்கும் முயற்சியாக இந்த கட்டுரை போட்டி நடத்தப்பட்டது. அதில், கல்லுாரி மாணவி வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது,' என கல்லுாரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

