/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பூங்காக்களை முறையாக பராமரிக்க பொறியியல் பிரிவினருக்கு அறிவுரை
/
பூங்காக்களை முறையாக பராமரிக்க பொறியியல் பிரிவினருக்கு அறிவுரை
பூங்காக்களை முறையாக பராமரிக்க பொறியியல் பிரிவினருக்கு அறிவுரை
பூங்காக்களை முறையாக பராமரிக்க பொறியியல் பிரிவினருக்கு அறிவுரை
ADDED : ஏப் 12, 2025 11:28 PM
கோவை: கோவை நகர் பகுதியில் உள்ள பூங்காக்களை முறையாக பராமரிக்க, பொறியியல் பிரிவினருக்கு மாநகராட்சி கமிஷனர் அறிவுரை வழங்கியுள்ளார்.
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், 412 இடங்களில் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் பணம் செலவிட்டாலும், இவற்றின் பராமரிப்பு படுமோசமாக இருக்கிறது. புதர்மண்டி இருப்பதோடு, சிறுவர்கள் விளையாடும் சாதனங்கள் உடைந்து கிடக்கின்றன. இதுதொடர்பாக, 9ம் தேதி நமது நாளிதழில் 'படமும் பாடமும்' பகுதியில் ஒரு பக்கத்துக்கு படங்கள் மற்றும் செய்தி வெளியிடப்பட்டது.
இதுதொடர்பாக, பொறியியல் பிரிவு அதிகாரிகளிடம் மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் விசாரணை நடத்தினார். புதர்மண்டியுள்ள பூங்காக்களை உடனடியாக சுத்தம் செய்ய அறிவுறுத்தினார். உடையாம்பாளையத்தில் உள்ள பூங்காவுக்கு கமிஷனர் நேரில் சென்று பார்வையிட்டு, பராமரிப்பு தொடர்பாக கேட்டறிந்தார்.
முதல்கட்டமாக, 376 பூங்காக்களை பராமரிக்க, ரூ.6.63 கோடி ஒதுக்கியிருப்பது தெரியவந்தது. இதில், 324 பூங்காக்களில் பராமரிப்பு பணி மேற்கொள்ள ஒப்பந்ததாரர் நியமிக்கப்பட்டு, 'ஒர்க் ஆர்டர்' வழங்கப்பட்டது. இன்னும், 52 பூங்காக்களுக்கு மட்டும் வழங்க வேண்டியிருக்கிறது.
கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கியும், பராமரிப்பு பணியை சரியாக மேற்கொள்ளாததால், அதிகாரிகளை அவர் கடிந்து கொண்டார். துாய்மை பணி செய்தல், செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுதல், மாலைநேரங்களில் மின் விளக்குகள் இயக்குதல் போன்ற பணிகளை, முறையாக மேற்கொள்ள அறிவுறுத்தினார்.