ADDED : செப் 16, 2025 10:32 PM

கோவை; கோவை மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர்கள் சங்கம் சார்பில், பொறியாளர் தின கொண்டாட்டம், ரெசிடென்சி டவர்ஸில் நடந்தது.
மறைந்த பொறியாளர் விஸ்வேஸ்வரய்யா படத்துக்கு மலர் துாவி மரியாதை செய்யப்பட்டது. செயலாளர் பிரேம்குமார் பாபு செயல் அறிக்கை வாசித்தார். சங்கம் சார்பில் கட்டட துறையில் சிறந்து விளங்கிய மூத்த பொறியாளர்கள் செல்வராஜ், அத்தப்பன் கவுரவிக்கப்பட்டனர்.
சிறந்த கட்டுமானத்துக்கான பொறியாளர் விருது ராஜரத்தினம், குமரவேல் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. சங்கத்தின் வெப்சைட் அறிமுகம் செய்யப்பட்டது. சங்கத்தின் 2025ம் ஆண்டின் முதன்மை திட்டமான, 'கன்ஸ்ட்ரக்சன் இண்டஸ்ட்ரி டைரக்டரி' வெளியி டப்பட்டது.
சங்கம் சார்பில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில், வெற்றி பெற்ற பொறியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப் பட்டது.
பொதுத்தேர்வில் முதல் இரண்டு இடங்கள் பெற்ற சங்க பொறியாளர்களின் குழந்தைகளுக்கு பரிசு தொகை வழங்கப்பட்டது. விழாவின் ஒரு பகுதியாக,500 மரக்கன்றுகள் நடப்பட்டன. சங்க தலைவர் செவ்வேள், துணை தலைவர் ராமலிங்கம், செயலாளர் பிரேம்குமார் பாபு, பொருளாளர் ரவி மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.