ADDED : செப் 17, 2025 10:33 PM

கோவை; கோவை ஜோன் சிவில் இன்ஜினியர் அசோசியேசன் மற்றும் இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி சார்பில், பொறியாளர் தினம் கொண்டாடப்பட்டது.
முதல் நிகழ்வாக, பொறியாளர் விஸ்வேஸ்வரய்யா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சிவில் இன்ஜினியரிங் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு போட்டி நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்பட்டது. இந்துஸ்தான் கல்வி குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி, முதல்வர் ஜெயா சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.
'கொசினா' தலைவர் பழனிச்சாமி, துணை தலைவர் தாமோதர் சாமி, செயலாளர் செந்தில்நாதன், பொருளாளர் சுந்தர்ராஜன், ஐ.பி.பி., ராஜதுரை, பி.ஆர்.ஓ., குமரேசன், ஒருங்கிணைப்பாளர் மகுடேஸ்வரன் மற்றும் சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர். பத்துக்கும் மேற்பட்ட கல்லுாரிகளில் இருந்து, 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.