/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஜி.டி.நாயுடு மேம்பாலத்துக்கு பொறியாளர்கள் பாராட்டு
/
ஜி.டி.நாயுடு மேம்பாலத்துக்கு பொறியாளர்கள் பாராட்டு
ஜி.டி.நாயுடு மேம்பாலத்துக்கு பொறியாளர்கள் பாராட்டு
ஜி.டி.நாயுடு மேம்பாலத்துக்கு பொறியாளர்கள் பாராட்டு
ADDED : டிச 18, 2025 05:11 AM

கோவை: இந்திய பாலங்கள் பொறியாளர்கள் கூட்டமைப்பு மற்றும் சென்னை ஐ.ஐ.டி. இணைந்து 'பிரிட்ஜ் 2025' என்ற தலைப்பில், சென்னையில் நடந்த தேசிய கருத்தரங்கில், கோவை ஜி.டி.நாயுடு மேம்பாலத்தின் சிறப்பு அம்சங்கள் பாராட்டை பெற்றது.
மாநில நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் (சிறப்பு திட்டங்கள்) சமுத்திரக்கனி பேசும்போது, ''போக்குவரத்து நெருக்கடி மிகுந்த நகர்ப்புறச் சூழலில் சவால்களை எதிர்கொண்டு, நவீன தொழில்நுட்பங்கள் மேம்பாலம் கட்டப்பட்டது. மையத்தடுப்புகளின் மத்தியில் சொட்டு நீர் பாசன வசதியுடன் செடிகள் வளர்க்கப்படுகின்றன.
மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்தியாவிலேயே முதன்முறையாக, ஏறு தளங்கள் மற்றும் இறங்கு தளங்களில் விபத்தை தவிர்க்க ரோலர்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன,'' என்றார்.
மேம்பாலம் கட்டுவதற்கு எடுத்துக் கொண்ட சிரத்தையை, கருத்தரங்கில் பங்கேற்றவர்கள் பாராட்டினர். இதையடுத்து, இந்திய பாலங்கள் பொறியாளர்கள் கூட்டமைப்பு சார்பில், கோட்ட பொறியாளர் சமுத்திரக்கனிக்கு சிறப்பு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

