/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'கட்டுமானத்துக்கு தரமான பொருட்கள் பயன்படுத்துவதை உறுதிப்படுத்தணும்'
/
'கட்டுமானத்துக்கு தரமான பொருட்கள் பயன்படுத்துவதை உறுதிப்படுத்தணும்'
'கட்டுமானத்துக்கு தரமான பொருட்கள் பயன்படுத்துவதை உறுதிப்படுத்தணும்'
'கட்டுமானத்துக்கு தரமான பொருட்கள் பயன்படுத்துவதை உறுதிப்படுத்தணும்'
ADDED : பிப் 17, 2024 02:16 AM

வீடு கட்டுவோர், கட்டுமானத்துக்கு தரமான பொருட்களை பயன்படுத்துவதை, உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும், என்கிறார் கோவை மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர்கள் சங்க உறுப்பினர் பிரவீன்குமார்.
அவர் கூறியதாவது:
கட்டுமானத்துக்கான தரமான பொருட்களை எப்படி அடையாளம் காண்பது? நமது இந்திய அமைப்பியல் துறையில், கட்டடம் சார்ந்த ஒவ்வொரு பொருட்களுக்குமே, தரக் கட்டுப்பாட்டு சோதனைகளும் அதற்கான முடிவுகளும், செய்முறை விளக்கங்களுடன் குறிப்பிடப்பட்டுள்ளன
நாம் அதை பின்பற்றி அல்லது சரி பார்த்து பொருட்களை வாங்க வேண்டும். அல்லது, வாங்கிய பொருட்களை சோதனைக்கு உட்படுத்தி, கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.
தற்போது நமக்கு எம் சாண்ட், செங்கல், டி.எம்.டி.,கம்பி, டைல்ஸ், சிமென்ட், கான்கிரீட் மற்றும் செங்கல் சப்ளை செய்கின்ற டீலர்கள்/சப்ளையர்களிடமிருந்து பொருட்களின் சோதனை முடிவுகளை, நேரடியாக கேட்டுப் பெற முடியும்.
குறிப்பாக, சிமென்ட், டி.எம்.டி., கம்பி போன்ற பொருட்களின் தரக்கட்டுப்பாட்டு சோதனை முடிவுகளை, நாம் இணையத்திலிருந்து நேரடியாக டவுன்லோடு செய்து கொள்ளும் வசதி உள்ளது.
குறிப்பிட்ட பொருட்களின் சோதனை முடிவுகளை, நமது டீலர்கள்/சப்ளையர்களிடம் இருந்து கேட்டு பெறுவது, நமது உரிமையாகும்.
இவ்வாறு, அவர் கூறினார்.