/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கொடிசியா, சி.ஐ.ஐ., சார்பில் தொழில்முனைவோர் பயிலரங்கு
/
கொடிசியா, சி.ஐ.ஐ., சார்பில் தொழில்முனைவோர் பயிலரங்கு
கொடிசியா, சி.ஐ.ஐ., சார்பில் தொழில்முனைவோர் பயிலரங்கு
கொடிசியா, சி.ஐ.ஐ., சார்பில் தொழில்முனைவோர் பயிலரங்கு
ADDED : ஜூலை 18, 2025 09:41 PM
கோவை; இந்திய தொழில் கூட்டமைப்பு வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்துக்கான மகத்துவ மையம் - சி.ஐ.ஐ., செல் மற்றும் கொடிசியா சார்பில், 'புதிய பயணம்: வளர்ச்சியை நோக்கி' என்ற பெயரில், குறுந்தொழில் முனைவோர்க்கான, இரண்டு நாள் வர்த்தக பயிலரங்கு, கோவை கொடிசியா வளாகத்தில் நடந்தது.
குறுந்தொழில் முனைவோர்க்கு வணிகம் மற்றும் நிதி குறித்த சிறப்பு பயிற்சியை வழங்குவது இத்திட்டத்தின் நோக்கம். துவக்க விழாவில், கொடிசியா தலைவர் கார்த்திகேயன், கோவையின் தொழில்முனைவுச் சூழல் குறித்து விளக்கினார். சி.ஐ.ஐ., கோவை, உற்பத்திப் பிரிவு கன்வீனர் மணி நாராயணன், நீடித்த தொழில்முனைவு வெற்றிக்கு, நிதி சுதந்திரத்தின் அவசியம் குறித்து விளக்கினார்.
பயிற்சியில் 52 நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். இவர்கள், சி.ஐ.ஐ., கோவையில், தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைப்பில், உறுப்பினர்களாக இணைத்துக் கொள்ளப்படுவர்.
மேலும், அடுத்த ஓராண்டுக்கு பயிற்சி, செயல்முறை விளக்கம், நிபுணர்களின் விளக்கங்கள், உபகரணங்கள், நெட்வொர்க்கிங், தலைமைத்துவம், விற்பனை மேம்பாடு, தொழிலாளர் நிர்வாகம், நிதி கையாளுகை, டிஜிட்டல் மாற்றங்கள் உள்ளிட்ட வழிகாட்டுதல்கள், கட்டணமின்றி வழங்கப்படும்.
சி.ஐ.ஐ., கோவை தொழில்முனைவோர் மேம்பாட்டு பிரிவு தலைவர் ரமேஷ், இணை கன்வீனர் மதன் மோகன் உட்பட பலர் பங்கேற்றனர்.