ADDED : நவ 14, 2024 05:08 AM
கோவை: கோவை இருகூரில், தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
மத்திய அரசின், சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கான வளர்ச்சி நிலைய கோவை கிளை, 'தாட்கோ', ராமசாமி சின்னம்மாள் அறக்கட்டளை ஆகியவை சார்பில், எஸ்.சி., பிரிவினருக்கு, தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம், இருகூரில் நடந்தது.
'தாட்கோ' மாவட்ட மேலாளர் மகேஸ்வரி, சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மத்திய அரசின் சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கான வளர்ச்சி நிலைய, கோவை மைய உதவி இயக்குனர் கயல்விழி, கனரா வங்கியின் மண்டல உதவி மேலாளர் கீதா, அறக்கட்டளை நிர்வாகிகள் ஈஸ்வரன், சரஸ்வதி ஈஸ்வரன், தொழில் முனைவோர் அருண்குமார் ஆகியோர் பங்கேற்றனர். அரசு திட்டங்கள், தொழில் முனைவோராக மாறினால் ஏற்படும் நன்மைகள், வங்கியின் செயல்பாடு, தொழில் துவங்கி அளிக்கப்படும் விழிப்புணர்வு, குறிப்பிட்ட பகுதிகளில் எந்தெந்த தொழில்கள் துவங்கலாம் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், 80க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
