/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திசு வளர்ப்பில் தொழில்முனைவு வாய்ப்பு
/
திசு வளர்ப்பில் தொழில்முனைவு வாய்ப்பு
ADDED : ஏப் 07, 2025 05:30 AM
கோவை; கோவை வேளாண் பல்கலை உயிர் தொழில்நுட்ப மகத்துவ மையத்தில், உயிரியல் தொழில்நுட்பத் திறன் வளர்ப்பு தொடர்பாக ஒரு நாள் பயிற்சி வழங்கப்பட்டது.
பி.எஸ்.ஜி., கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லூரி மாணவ, மாணவியர் பங்கேற்ற இப்பயிற்சியை, காக்ஸ்பிட் திட்ட இயக்குநர் மோகன்குமார் துவக்கி வைத்தார்.
பேராசிரியர் ரேணுகா, தாவர திசு வளர்ப்பு, வர்த்தக வாய்ப்பாக வளர்ந்து வருவதைக் குறித்து விளக்கினார்.
அலங்கார தாவரங்கள், மலர்கள், தோட்டக்கலை, வாழை, கரும்பு, மூங்கில் மற்றும் தேக்கு போன்ற தாவரங்களை திசு வளர்ப்பு வாயிலாக வேளாண் தொழில்முனைவு வாய்ப்புகள் குறித்து விளக்கினார்.
மேலும், சர்வதேச அளவில் வெற்றிகரமான தொழில்முனை வுத் துறையாக, ஏற்றுமதி வாய்ப்புகள் குறித்தும் விளக்கினார்.
உதவிப் பேராசிரியர் அமிர்தம், உணவு சார்ந்த ஊட்டச்சத்து தொழில் முனைவு, ஸ்டார்ட்-அப் தமிழ்நாடு துணைத் தலைவர் குமார், புதிய தொழில் முனைவோருக்கு தமிழக அரசால் தொடங்கப்பட்ட அமைப்புககள், நிதியுதவி, வழிகாட்டுதல் குறித்து விளக்கினார்.
துறைத் தலைவர் கோகிலா தேவி, உயிரி தகவலியல் துறை உதவிப் பேராசிரியர் சரண்யா உள்பட பலர் பங்கேற்று பயிற்சியளித்தனர்.

