/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
/
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
ADDED : ஜன 28, 2025 11:44 PM
மேட்டுப்பாளையம்; மத்திய அரசு சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றுத் துறை உதவியுடன், தமிழக அரசு சுற்றுச்சூழல் துறையும், சுற்றுச்சூழல் கல்வி அறக்கட்டளை, தேசிய பசுமை படை ஆகியவை இணைந்து, சுற்றுச்சூழல் குறித்த, விழிப்புணர்வு பிரசார கலை நிகழ்ச்சி சிறுமுகை தியேட்டர் மேட்டில் நடந்தது. சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பிரசார கலை நிகழ்ச்சிக்கு, தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் பாலுசாமி தலைமை வகித்தார். தேனி மின்னல் கலைக்குழுவை சேர்ந்த, 12 பேர் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.
இதில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பை மற்றும் பொருட்களை தவிர்க்க வேண்டும். மண்வளம், இயற்கை வளம் பாதுகாக்க வேண்டும். திடக்கழிவு மேலாண்மை, நீர் பாதுகாப்பு குறித்து கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு துணிப் பைகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் சுகுமாரன், சடையாண்டி ஆகியோர் செய்து இருந்தனர்.