/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாணவர்களுக்கு சுற்றுசூழல் விழிப்புணர்வு
/
மாணவர்களுக்கு சுற்றுசூழல் விழிப்புணர்வு
ADDED : அக் 30, 2024 08:27 PM
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில், சுற்றுசூழல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் தேன்மொழி தலைமை வகித்தார். இதில், பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பேரழிவில் இருந்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும். ஒவ்வொருவரும் மரம் வளர்க்க வேண்டும். மரம் வளர்ப்பதால் சுத்தமான காற்று கிடைப்பதுடன், மழைவளம் பெருகும்.
மண்ணுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக் உள்ளிட்ட மக்காத கழிவை எரிப்பதால், சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து துணி பையை பயன்படுத்த வேண்டும். மக்காத கழிவுகளை தரம் பிரித்து துாய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
தனிநபர் வாகன பயன்பாட்டை குறைத்து, பொதுவாகனங்களை பயன்படுத்த வேண்டும். இதனால், எரிபொருள் சிக்கனம் ஏற்படும். மின்சாரம் விரயம் தவிர்க்க வேண்டும், என, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தொடர்ந்து மாணவர்கள் சுற்றுச்சூழல் குறித்த உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.