ADDED : ஏப் 12, 2025 11:34 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: கோவை பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில், பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் பள்ளி வளாகத்தில் கூடி, சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
பள்ளி தலைமை ஆசிரியர் சகுந்தலா கூறியதாவது:
சாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும், சாதிகளின் பெயரால் நடக்கும் சமூக அடக்கு முறைகளுக்கு எதிராகவும் தொடர்ந்து போராடி, ஒதுக்கப்பட்டவர்களுடைய உரிமைகளுக்காகவும், சமத்துவத்துக்காகவும், வாழ்நாள் முழுவதும் பாடுபட்டு, எளிய மக்கள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்திய, அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு, மாணவர்களும், ஆசிரியர்களும் சமத்துவ நாள் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.
இவ்வாறு, அவர் கூறினார்.

