/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு அலுவலகங்களில் சமத்துவ பொங்கல் விழா
/
அரசு அலுவலகங்களில் சமத்துவ பொங்கல் விழா
ADDED : ஜன 11, 2025 09:38 AM

பொள்ளாச்சி : பொள்ளாச்சியில், அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லுாரிகளில், சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
தமிழர்களின் பண்பாட்டு விழாவான பொங்கல் திருவிழா, வாழ்வியல் மற்றும் உழவுத் தொழில் செய்வோரின் சமூகத்தோடு இணைந்து, நன்றி தெரிவிக்கும் விழாவாக கொண்டாடப்படுகிறது.
பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராம மக்கள், இயற்கை மற்றும் கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த விழாவை கொண்டாட தயாராகி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக, அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லுாரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில், நேற்று, சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.
புதுப்பானையில் பொங்கல் வைத்தும், உறியடித்தல், கயிறு இழுத்தல், மியூசிக்கல் சேர் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடத்தியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில், சப்-கலெக்டர் கேத்தரின் சரண்யா தலைமையில், பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அலுவலர்கள், பணியாளர்கள் அனைவரும் பாரம்பரிய உடையான வேட்டி, சேலை அணிந்து, பொங்கல் வைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பொள்ளாச்சி வடக்கு இடைநிலை மற்றும் தொடக்கக் கல்வி வட்டார கல்வி அலுவலகத்தில் நடந்த பொங்கல் விழாவில், லக்கி கார்னர், பலுான் ஊதி உடைத்தல், பொங்கல் வைத்தல், கும்மி அடித்தல் என போட்டிகள் வைக்கப்பட்டு, பரிசுகளும் வழங்கப்பட்டன.