/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பூச்சி விரட்டியாக எருக்கு இலை கரைசல்
/
பூச்சி விரட்டியாக எருக்கு இலை கரைசல்
ADDED : பிப் 23, 2026 06:37 AM

சூலுார்: 'எருக்கு இலை கரைசல் பூச்சி விரட்டியாகவும், வளர்ச்சி ஊக்கியாகவும் பயனளிக்கிறது' என, வேளாண் மாணவியர், விவசாயிகளுக்கு விளக்கினர்.
கோவை வேளாண் பல்கலை இளங்கலை நான்காம் ஆண்டு மாணவியர் குழுவினர், சுல்தான் பேட்டை பகுதியில் தங்கி, கிராம தொழில் முனைவோர் வளர்ச்சி திட்டம் எனும் பாடத்துக்காக களப்பணி செய்து வருகின்றனர்.
வடவள்ளி கிராமத்தில் எருக்கு இலை கரைசல் தயாரித்தல், அதன் பயன்கள் குறித்து விவசாயிகளிடம் விளக்கினர்.
மாணவியர் கூறுகையில், 'எருக்கு இலை கரைசல் சிறந்த பூச்சி விரட்டியாகவும், பயிர்களுக்கு இயற்கை வளர்ச்சி ஊக்கியாகவும் செயல்படுகிறது.
போரான் உட்பட பல சத்துக்களை அளித்து பூக்கள் மற்றும் குரும்பை உதிர்தலை தடுக்கிறது' என்றனர்.
சாகுபடி தொழில்நுட்பம், சந்தைப்படுத்துதல் உள்ளிட்டவைகள் குறித்து விவசாயிகளின் சந்தேகங்களுக்கு மாணவியர் விளக்கம் அளித்தனர்.

