/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இ.எஸ்.ஐ., பணியாளர்கள் சம்பளம் வழங்க கோரிக்கை
/
இ.எஸ்.ஐ., பணியாளர்கள் சம்பளம் வழங்க கோரிக்கை
ADDED : ஜூலை 13, 2025 05:42 AM

கோவை : கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லுாரி பணியாளர்கள் ஊதியத்தை சரியான நேரத்திற்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
கிறிஸ்டல் தனியார் நிறுவனத்தின் கீழ், ஒப்பந்த முறையில், துாய்மை பணி, அலுவலக உதவியாளர் உட்பட 222 பேர் பல்வேறு நிலைகளில் தற்காலிகமாக இ.எஸ்.ஐ., மருத்துவமனை மற்றும் கல்லுாரியில் பணிபுரிகின்றனர்.
இவர்களுக்கு ஊதியம் மாதந்தோறும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. ஆனால், சரியான நேரத்திற்கு வழங்காமல் இழுத்தடிப்பதாக, பணியாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி, ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இ.எஸ்.ஐ., தொழிற்சங்க நிர்வாகி பன்னீர் செல்வம் கூறுகையில், ''மாதந்தோறும் குறிப்பிட்ட தேதி, ஊதியம் வழங்காமல் காலம் தாமதம் ஏற்படுத்துவதால் கடுமையான சிரமங்களுக்கு ஆளாகின்றோம். பெரும்பாலானவர்களுக்கு வாடகை, இ.எம்.ஐ., என பல பொருளாதார சிக்கல்கள் உள்ளன.
ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தேதி நிர்ணயித்து ஊதியம் விடுவிக்க வேண்டும். கலெக்டர் அலுவலக பணியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்கவேண்டும்,'' என்றார்.
இ.எஸ்.ஐ., மருத்துவமனை அரசு மருத்துவக்கல்லுாரி டீன் ரவீந்தரனிடம் கேட்டபோது, '' இப்பணியாளர்களுக்கு அரசு ஊதியம் கொடுப்பதில்லை. கிறிஸ்டல் எனும் தனியார் நிறுவனம் கொடுக்கிறது,'' என்றார்.