/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இ.எஸ்.ஐ., சார்பில் தொழிலாளிக்கு உதவித்தொகை
/
இ.எஸ்.ஐ., சார்பில் தொழிலாளிக்கு உதவித்தொகை
ADDED : டிச 04, 2024 10:20 PM
சூலுார்; பணியின் போது, கை விரலில் அடிபட்டு பாதிக்கப்பட்ட தொழிலாளிக்கு, இ.எஸ்.ஐ., சார்பில், ஊன உதவித்தொகை வழங்கப்பட்டது.
கண்ணம்பாளையத்தை சேர்ந்தவர் பூபதி ராஜ். ராவத்தூர் பிரிவில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வரும் இவர், கடந்தாண்டு, பணியில் இருந்தபோது, எதிர்பாராத வகையில் நடந்த விபத்தில், வலது கையில் விரல் பாதிக்கப்பட்டது.
அவர் தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தில் பதிவு செய்திருந்ததால், அவருக்கு இ.எஸ்.ஐ., சார்பில், ஊன உதவித்தொகை வழங்கப்பட்டது. இ.எஸ்.ஐ., உதவி இயக்குனர் உத்தரவுப்படி, சூலுார் கிளை மேலாளர் உமா, முதல் தவணை உதவித்தொகையாக, 12 ஆயிரத்து, 206 ரூபாய்க்கான காசோலை மற்றும் நிரந்தர ஊன உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவையும், பூபதி ராஜிடம் வழங்கினார். காசாளர் அஜித் பீட்டர், அலுவலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.