/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விபத்தில் பாதித்தோருக்கு இ.எஸ்.ஐ., உதவித்தொகை
/
விபத்தில் பாதித்தோருக்கு இ.எஸ்.ஐ., உதவித்தொகை
ADDED : நவ 17, 2024 10:19 PM
கோவை; பணியின்போது விபத்தில் பாதித்த இருவருக்கு, இ.எஸ்.ஐ., நிரந்தர ஊன உதவித்தொகை வழங்கப்பட்டது.
கோவை இ.எஸ்.ஐ., கார்ப்பரேஷன் துடியலுார் கிளை அலுவலகப் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர் ரோகித் பிந்த். கடந்தாண்டு அக்., 27ல் பணியில் இருந்தபோது ஏற்பட்ட விபத்தில், அவரது வலது கண்ணில், 40 சதவீதம் பாதிப்பு ஏற்பட்டது.
இ.எஸ்.ஐ., நிரந்தர ஊன உதவித்தொகை திட்டத்தில், ரோகித் பிந்தனுக்கு ஒரு நாளைக்கு ரூ.353.30 என கணக்கிட்டு,31 நாட்களுக்கு, 10,950 ரூபாய் வீதம் மாதம்தோறும், ஓய்வூதிய தொகை வாழ்நாள் முழுவதும் வழங்க உத்தரவிடப்பட்டது. நிலுவைத் தொகையாக இந்தாண்டு மே முதல் ரூ.63,930- காசோலை வழங்கப்பட்டது.
அதேபோல், தனியார் பேப்பர் நிறுவனத்தில் பணிபுரிந்த மகேந்திரன் என்பவர், பணியின்போது விரலில் ஏற்பட்ட இழப்புக்காக, 4 சதவீதம், அதாவது ஒரு நாளைக்கு ரூ.21.52 என கணக்கிட்டு, 31 நாட்களுக்கு மாதம்தோறும், 678 ரூபாய் ஓய்வூதிய ஊன உதவித் தொகை வழங்கப்பட்டது.
நிலுவைத் தொகையாக நடப்பாண்டு ஜூன் முதல் ரூ.3,035 காசோலை வழங்கப்பட்டது.
இ.எஸ்.ஐ., கார்ப்பரேஷன் கோவை துணை மண்டல இணை இயக்குனர் (பொ) ரவிக்குமார் வழங்கினார்.
இ.எஸ்.ஐ., கார்ப்பரேஷன் உதவி இயக்குனர் பெருமாள், துடியலுார் கிளை மேலாளர் பிரேமானந்தன் பங்கேற்றனர்.