தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மாணவர்களுக்கு கட்டுரை போட்டி

 மாணவர்களுக்கு கட்டுரை போட்டி

 மாணவர்களுக்கு கட்டுரை போட்டி


ADDED : மார் 29, 2026 09:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 29, 2026 09:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அன்னூர்: அனைவரும் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் கட்டுரை போட்டி நடந்தது.

சட்டசபை தேர்தல் வரும் ஏப். 23ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து வாக்காளர்கள் அனைவரும் வாக்களிப்பதை வலியுறுத்தும் விதமாக, அன்னூர், அமரர் முத்து கவுண்டர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கட்டுரை போட்டி நடந்தது. 'வாக்களிப்பதன் அவசியம்,' என்னும் தலைப்பில் கட்டுரை போட்டி நடந்தது. இதில் ஒன்பதாம் வகுப்பு மாணவ, மாணவியர் பங்கேற்றனர். பங்கேற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. முதல் மூன்று இடங்களை பிடித்த கட்டுரை எழுதிய மாணவ மாணவியருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவியர் தங்களது குடும்ப உறுப்பினர்களிடமும் வாக்களிக்க வேண்டிய அவசியத்தை தெரிவிக்க வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

வருவாய் ஆய்வாளர்கள் செந்தில்குமார், குருநாதன், கிராம நிர்வாக அலுவலர் குமரன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us