/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நினைவேந்தல் விழாவில் 'கட்டுரை கொத்து' நுால்
/
நினைவேந்தல் விழாவில் 'கட்டுரை கொத்து' நுால்
ADDED : டிச 08, 2025 05:14 AM
கோவை: 'கோவை கிழார்' என அழைக்கப்படுகிற ராமச்சந்திரன் செட்டியார் நினைவேந்தல் விழா, ரேஸ்கோர்ஸ் காஸ்மோ பாலிட்டன் கிளப்பில் உள்ள, பெடாக் அரங்கில் நடந்தது.
அரன்பணி அறக்கட்டளை தலைவர் தியாகராஜன் வரவேற்றார். காஸ்மோபாலிட்டன் கிளப் செயலர் ராஜேஷ் கோவிந்தராஜுலு முன்னிலை வகித்தார். கோவைக் கிழார் எழுதிய சிறு கட்டுரைகளின் தொகுப்பாக, 'கட்டுரை கொத்து' என்ற நுால், விழா மலராக வெளியிடப்பட்டது.
அறக்கட்டளையின் பொருளாளர் சந்திரா சுப்ரமணியன் ஏற்பாட்டில் நடந்த விழாவில், அறங்காவலர் மணிகண்ட மூர்த்தி, கொங்குநாடு கலை அறிவியல் கல்லுாரியின், தமிழ்துறை முதுநிலை உதவிப் பேராசிரியர் சதீஷ் குமார், பேரூர் தமிழ்க் கல்லுாரியின் ஓய்வு பெற்ற இணைபேராசிரியர் ஞானப்பூங்கோதை உட்பட பலர் பங்கேற்றனர்.

