/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆதார் மையங்கள் செயல்பாடு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
/
ஆதார் மையங்கள் செயல்பாடு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
ஆதார் மையங்கள் செயல்பாடு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
ஆதார் மையங்கள் செயல்பாடு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
ADDED : டிச 08, 2025 05:12 AM
கோவை: போதிய கட்டமைப்புடன் ஆதார் மையங்கள் சீராக செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தபால் அலுவலகங்களில் வழங்கப்படும் ஆதார் சேவைகள், பொது மக்களுக்கு பயனளிக்கின்றன. இதன் சேவையை இன்னும் துரிதப்படுத்த வேண்டும் என, கோவை தபால் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளார்.
ஆதார் மையங்களின் சீரான செயல்பாட்டுக்கு, தபால் அலுவலகங்களில் இருக்கும் ஆதார் உபகரணங்கள் அனைத்தும் செயல்பாட்டில் இருப்பதையும், ஒன்றுக்கும் மேற்பட்ட பயிற்சி பெற்ற ஆபரேட்டர்கள் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். அனைத்து ஆதார் மையங்களிலும் போதுமான பணியாளர் ஏற்பாடு செய்ய வேண்டும்.
ஆதார் உபகரணங்களில் பழுதுபார்ப்பு, மாற்றம் இருந்தால், உடனடியாக தலைமை அலுவலகத்துக்கு தெரிவிக்க வேண்டும்.
அலுவலகத்தில் தவிர்க்க முடியாத இடையூறு ஏற்பட்டால், வாடிக்கையாளர்கள் அருகிலுள்ள மையத்துக்கு வழிகாட்டப்பட வேண்டும் என, கோட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

