/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பணப்பலன்கள் ஒப்படைப்பு எஸ்டேட் தொழிலாளி மகிழ்ச்சி
/
பணப்பலன்கள் ஒப்படைப்பு எஸ்டேட் தொழிலாளி மகிழ்ச்சி
ADDED : ஜூன் 01, 2025 11:14 PM
வால்பாறை, : தொழிற்சங்கத்தின் தலையீட்டால் தொழிலாளிக்கு பணிக்கொடை தொகை கிடைத்தது.
வால்பாறை அடுத்துள்ளது முடீஸ் குரூப் டீ எஸ்டேட். இங்கு தொழிலாளியாக பணிபுரிந்து வந்த செல்வி, பணி ஓய்வு பெற்ற பின்னரும், நீண்ட நாட்களாக பணிக்கொடை தொகை கிடைக்காமல் கடும் அவதிப்பட்டார்.
பாதிக்கப்பட்ட தொழிலாளி, வால்பாறை ஏ.டி.பி., தொழிற்சங்க அலுவலத்தில் தலைவர் அமீதுவிடம் புகார் தெரிவித்தார்.
இதனையடுத்து சம்பந்தப்பட்ட எஸ்டேட் அதிகாரிகளிடம், தொழிற்சங்க தலைவர் பேசி, தொழிலாளிக்கு கிடைக்க வேண்டிய பணிக்கொடை தொகையை பெற்றுக்கொடுத்தார். இதனையடுத்து அந்த எஸ்டேட் தொழிலாளர்கள் தொழிற்சங்க தலைவரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். நிகழ்ச்சியில் அ.தி.மு.க., மாவட்ட பாசறை இணை செயலாளர் சலாவுதீன் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.