/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நிழற்கூரை பணி பாதியில் நிறுத்தம் எஸ்டேட் தொழிலாளர்கள் தவிப்பு
/
நிழற்கூரை பணி பாதியில் நிறுத்தம் எஸ்டேட் தொழிலாளர்கள் தவிப்பு
நிழற்கூரை பணி பாதியில் நிறுத்தம் எஸ்டேட் தொழிலாளர்கள் தவிப்பு
நிழற்கூரை பணி பாதியில் நிறுத்தம் எஸ்டேட் தொழிலாளர்கள் தவிப்பு
ADDED : ஏப் 18, 2025 11:04 PM

வால்பாறை: வால்பாறை, வாகமலை எஸ்டேட் தொழிலாளர்களின் நலன் கருதி, நகராட்சி சார்பில் கடந்த ஆண்டு, 4 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பயணியர் நிழற்கூரை கட்டும் பணி துவங்கியது. ஆனால், பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டதால், தொழிலாளர்கள் அவதிப்படுகின்றனர்.
வனவிலங்குகள் அதிகளவில் நடமாடும் இந்த எஸ்டேட் பகுதியில், நிழற்கூரை இல்லாததால், மழையிலும், வெயிலிலும் பஸ்சிற்காக பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
தொழிலாளர்கள் கூறுகையில், 'எஸ்டேட் பகுதியில் தெருவிளக்குகள் எரிவதில்லை. இதனால் வனவிலங்குகள் நடமாட்டமிகுந்த வாகமலை எஸ்டேட் தொழிலாளர்களுக்கு போதிய பாதுகாப்பில்லாத நிலை உள்ளது.
இந்நிலையில், பயணியர் நிழற்கூரை பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. மழை காலத்திற்கு முன் நிழற்கூரை பணியை நிறைவு செய்து, பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும்,' என்றனர்.
கவுன்சிலர் ஜெயந்தியிடம் கேட்டபோது, '18வது வார்டில் எந்த வளர்ச்சிப்பணியும் முறையாக நடப்பதில்லை. பல முறை கவுன்சிலில் தெரிவித்தும் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர். மயானக்கூரை கட்டும் பணியும், பயணியர் நிழற்கூரை கட்டும் பணியும் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன.
பயணியர் நிழற்கூரைக்கும், மயானக்கூரைக்கும் கூடுதலாக தலா 3 லட்சம் ரூபாய் தேவைப்படுவதால் பணி நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கூடுதல் நிதி ஒதுக்கிய பின் பணிகள் துவங்கப்படும்,' என்றார்.

