/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பா.ஜ.,வில் இணைந்த எஸ்டேட் தொழிலாளர்கள்
/
பா.ஜ.,வில் இணைந்த எஸ்டேட் தொழிலாளர்கள்
ADDED : நவ 12, 2025 11:20 PM

வால்பாறை: வால்பாறை, சின்னக்கல்லார் எஸ்டேட் தொழிலாளர்கள் பா.ஜ., வில் இணைந்தனர்.
வால்பாறை அடுத்துள்ளது சின்கோனா 'டான்டீ' தேயிலை தோட்டம். இங்குள்ள சின்னக்கல்லார் எஸ்டேட்டில் பணியாற்றும் தொழிலாளர்களை, அருகில் உள்ள டூபைத்திரி என்ற எஸ்டேட்க்கு இடம் பெயருமாறு 'டான்டீ' அதிகாரிகள் கூறி வருகின்றனர்.
ஆனால், தொழிலாளர்கள் தொடர்ந்து அதே பகுதியில் வசித்து வருகின்றனர். இதனிடையே கடந்த பல ஆண்டுகளாக இந்த பகுதிக்கு இயக்கி வந்த அரசு பஸ்சும் திடீரென நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், வால்பாறை பா.ஜ.,கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், சின்னக்கல்லார் எஸ்டேட் பகுதிக்கு சென்று, தொழிலாளர்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தனர்.
பஸ் இயக்கவும், அடிப்படை வசதிகள் செய்து தரவும் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவதாக உறுதியளித்தனர். அதன் அடிப்படையில், கடந்த இரண்டு நாட்களாக வால்பாறையிலிருந்து சின்னக்கல்லார் பகுதிக்கு அரசு பஸ் மீண்டும் இயக்கப்படுகிறது.
இதனிடையே, அந்தப்பகுதியில் பணிபுரியும் தொழிலாளர்கள் நேற்று பா.ஜ., மண்டல் தலைவர் செந்தில்முருகன் தலைமையில் அக்கட்சியில் இணைந்தனர். நிகழ்ச்சியில் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் பாலாஜி, மண்டல் பொதுச்செயலாளர் முகேஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

