/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாலையில் சரிந்த மின்கம்பம் மாற்றி அமைக்கப்படுமா?
/
சாலையில் சரிந்த மின்கம்பம் மாற்றி அமைக்கப்படுமா?
ADDED : நவ 12, 2025 11:18 PM

வால்பாறை: சாலையில் சரிந்த மின்கம்பத்தை விபத்து ஏற்படுவதற்கு முன் மாற்றியமைக்க வேண்டும், என, வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வால்பாறை நகராட்சி சார்பில், பல்வேறு இடங்களில் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், வால்பாறை - பொள்ளாச்சி ரோட்டில் பொதுப்பணித்துறை குடியிருப்பு எதிரில் உள்ள, மின்கம்பம் சரிந்த நிலையில் உள்ளது. எந்த நேரத்திலும் ரோட்டில் சரிந்து விழும் நிலையில் உள்ளதால் வாகன ஓட்டுநர்கள் அச்சத்துடன் பயணிக்கின்றனர்.
வாகன ஓட்டுநர்கள் கூறியதாவது:
வால்பாறையில் பல்வேறு இடங்களில் மின்கம்பம் மோசமான நிலையில் உள்ளது. அதை மாற்றியமைக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும். வால்பாறை நுழைவுவாயிலில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் எந்த நேரத்திலும் சாலையில் விழும் நிலையில் சரிந்து உள்ளது.
இதனால், அசம்பாவிதம் ஏற்படுவதற்குள் மின்கம்பத்தை மாற்றியமைக்க வேண்டும். வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த எஸ்டேட் பகுதியில் எரியாத மின்விளக்குகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.

