நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவில் இருந்து நடுப்புணிக்கு பஸ் இயக்க வேண்டுமென, மக்கள் வலியுறுத்துகின்றனர்.
தமிழக - கேரள எல்லையில் உள்ள நடுப்புணியில் இருந்து, கோவை அல்லது கிணத்துக்கடவு செல்ல, பஸ் வாயிலாக பொள்ளாச்சி சென்று அங்கிருந்து மாற்று பஸ்சில் மக்கள் பயணிக்கின்றனர். இதனால் பயணிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது.
இதற்கு பதிலாக கிணத்துக்கடவில் இருந்து நடுப்புணிக்கு பஸ் இயக்கினால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நடுப்புணியில் இருந்து கோவை செல்பவர்களுக்கு பயண தூரம் மற்றும் நேரம் குறையும். வேலைக்கு செல்பவர்கள், பள்ளி மற்றும் கல்லூரி செல்பவர்கள் பயனடைவார்கள். மேலும், கேரளா செல்லும் மக்களுக்கும் உபயோகமாக இருக்கும்.
எனவே, பயணியர் நலன் கருதி, கோவையில் இருந்து கிணத்துக்கடவு வழியாக நடுப்புணிக்கு பஸ் இயக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.

