UPDATED : ஜூலை 29, 2026 05:01 PM
ADDED : ஜூலை 29, 2026 04:41 PM

கோவை: 'அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ் வடகோவை ரயில்வே ஸ்டேஷனில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் நுழைவாயில், அலுவலகம், முகப்பு பணி, நடைமேடை அமைத்தல் உள்ளிட்ட வேலைகள் நடக்கின்றன.
போத்தனுார் ஸ்டேஷனிலும் ரூ.144.36 கோடிக்கு வேலைகள் துவங்கப்பட்டுள்ளன. இவ்விரு ஸ்டேஷனிலும் வாகனம் நிறுத்த இடவசதி அதிகம் உள்ளது.
'கோவை ஸ்டேஷனில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வடகோவை, போத்தனுார் ஸ்டேஷன்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இங்கு 'பிட் லைன்', நுழைவாயில், கூடுதல் நடைமேடை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்துவதால் எதிர்காலத்தில் கூடுதல் ரயில்கள் இயக்கப்படும். இங்கு வரும் பயணிகள் வசதிக்காக இ.வி., சார்ஜிங் நிலையங்கள் அமைக்க உள்ளோம். சேலம் கோட்டத்தில் இந்த இரு ஸ்டேஷன்கள் உட்பட ஏழு ஸ்டேஷன்களில் இவ்வசதி ஏற்படுத்தப்பட உள்ளது' என்கின்றனர் ரயில்வே அதிகாரிகள்.
