/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேளாண் பல்கலையில் மதிப்பீட்டுக்குழு ஆய்வு
/
வேளாண் பல்கலையில் மதிப்பீட்டுக்குழு ஆய்வு
ADDED : ஜூலை 17, 2025 10:41 PM
கோவை; கோவை, வேளாண் பல்கலையை சட்டசபை மதிப்பீட்டுக் குழு பார்வையிட்டது. குழுவை, பல்கலை துணைவேந்தர் (பொ) தமிழ்வேந்தன் வரவேற்றார்.
வேளாண் பல்கலைக்கு தமிழக அரசின் நிதியுதவி பெறும் திட்டங்கள், வசதிகளை, காந்திராஜன் தலைமையிலான மதிப்பீட்டுக் குழுவினர் மதிப்பாய்வு செய்தனர்.
பூச்சியியல் துறையின் கீழ் செயல்படும் பூச்சியியல் அருங்காட்சியகத்தில், கணினி மயமாக்கல், மூலக்கூறு பகுப்பாய்வு, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பூச்சிகள் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ளமை ஆகியவற்றைப் பார்வையிட்டனர்.
ஒரு லட்சம் சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ள தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப மகத்துவ மையம் மற்றும் தாவரவியல் பூங்காவை மதிப்பீட்டுக் குழுவினர் பார்வையிட்டனர்.
தொடர்ந்து, உயிரி தொழில்நுட்ப மகத்துவ மையம் செயல்படும் விதம், டிரோன்களின் வகைகள், ஸ்டார்ட் நிறுவனங்களுக்கு உதவும் விதம், தொழில்முனைவோரின் தயாரிப்புகள் ஆகியவற்றைப் பார்வையிட்டனர்.
பின்னர் முன்னோடி விவசாயிகளுடன் கலந்துரையாடினர். தென்னை, மக்காச்சோளத்தில் பூச்சி மேலாண்மை, தானியங்கி இயந்திரங்களைப் பயன்படுத்துதல் ஆகியவை குறித்து விளக்கப்பட்டது.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, உயிரி தொழில்நுட்ப மகத்துவ மைய வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.