/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கைரேகை பதிவு விழாவிட்டாலும் கவலை வேண்டாம்! பொங்கல் பரிசு உண்டு என உறுதி
/
கைரேகை பதிவு விழாவிட்டாலும் கவலை வேண்டாம்! பொங்கல் பரிசு உண்டு என உறுதி
கைரேகை பதிவு விழாவிட்டாலும் கவலை வேண்டாம்! பொங்கல் பரிசு உண்டு என உறுதி
கைரேகை பதிவு விழாவிட்டாலும் கவலை வேண்டாம்! பொங்கல் பரிசு உண்டு என உறுதி
UPDATED : ஜன 13, 2026 10:19 AM
ADDED : ஜன 13, 2026 05:05 AM

கோவை ;ரேஷன் கடைகளில் உள்ள பி.ஓ.எஸ்., கருவியில் கைரேகை பதிவு விழாததால் பலருக்கு பொங்கல் தொகுப்பு கிடைக்கவில்லை என, கார்டுதாரர்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால், டோக்கன் பெற்ற எல்லோருக்கும் பொங்கல் பரிசு கிடைக்கும் என்று, மாவட்ட வழங்கல் அலுவலர் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு, பொங்கல் பண்டியை முன்னிட்டு, கோவை மாவட்டத்தில், 11.29 லட்சம் அரிசி கார்டுதாரர்களுக்கு, 3000 ரூபாய், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ரேஷன் கடைகளில் உள்ள பி.ஓ.எஸ்., கருவியில் கைரேகை பதிவு விழாததால், பலருக்கு பொங்கல் தொகுப்பு கொடுக்கவில்லை என்றும், இலவச வேட்டி, சேலை கிடைக்கவில்லை என்றும் கார்டுதாரர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மாவட்ட வழங்கல் அலுவலர் விஸ்வநாதன் கூறியதாவது:
கைரேகை பதிவு விழவில்லை என்பதால், பொங்கல் தொகுப்பு கொடுக்காமல் நிறுத்தி வைக்கப்படவில்லை. கைரேகை விழவில்லை என்றால் கருவிழி பதிவு எடுக்கப்படுகிறது. அதுவும் விழவில்லை என்றால் கார்டுதாரரின் புகைப்படத்தை எடுத்துக்கொண்டு பொங்கல் தொகுப்பும், பணமும் வழங்க சொல்லி இருக்கிறோம்.
டோக்கன் வழங்கப்பட்ட அனைவருக்கும் பொங்கல் தொகுப்பு கிடைக்கும். வாங்காமல் விடுபட்டவர்களுக்கு, பொங்கல் முடியும் முன் வழங்கப்படும்.
இன்டெர்நெட் சர்வர் பிரச்னை தமிழகம் முழுவதும் உள்ளது. கோவையில் பரவாயில்லை. ஒரு சில இடங்களில்தான் சர்வர் பிரச்னை உள்ளது. இதுவரை 10 லட்சம் கார்டுதாரர்கள் பொங்கல் தொகுப்பு பெற்றுள்ளனர். இலவச வேட்டி, சேலை போதிய அளவு இருப்பு உள்ளது. எல்லோருக்கும் கிடைக்கும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

