/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிளஸ் 2 பெயிலானாலும் தொழில் அதிபராகலாம்! டிப்ளமோவுக்கு பின் வாய்ப்புகள் ஏராளம்
/
பிளஸ் 2 பெயிலானாலும் தொழில் அதிபராகலாம்! டிப்ளமோவுக்கு பின் வாய்ப்புகள் ஏராளம்
பிளஸ் 2 பெயிலானாலும் தொழில் அதிபராகலாம்! டிப்ளமோவுக்கு பின் வாய்ப்புகள் ஏராளம்
பிளஸ் 2 பெயிலானாலும் தொழில் அதிபராகலாம்! டிப்ளமோவுக்கு பின் வாய்ப்புகள் ஏராளம்
ADDED : ஆக 14, 2025 10:21 PM

கோவை; பிளஸ் 2 தேர்வில் பெயிலானாலும், வாழ்க்கையில் வென்று முன்னேற வேண்டும் என்கிற துடிப்பு இருந்தால் போதும்; தொழிலதிபராகலாம்.
கோவையில் இப்போதும் பல தொழில் நிறுவனங்கள் நடத்தி வருபவர்கள் டிப்ளமோ படித்தவர்களே. 20 -- 30 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் இன்ஜினியரிங் கல்லுாரிகள் விரல் விட்டும் எண்ணும் அளவில் இருந்தன. அப்போதெல்லாம் பாலிடெக்னிக்கில் இடம் கிடைப்பது கடினமாக இருந்தது; தற்போது நிலைமை தலைகீழாக மாறி விட்டது.
பாலிடெக்னிக்குகளில் சேர யாரும் விரும்புவது இல்லை. கோவை அரசு பாலிடெக்னிக்கில் பாதி இடம் கூட நிரம்பவில்லை. பிளஸ் 2 பாஸ் ஆனாலும், பெயில் ஆனாலும் சேர முடியும். பாலிடெக்னிக்குகளில் சிவில், மெக்கானிக், எலெக்ட்ரிக்கல், ஆட்டோமோட்டிவ் மட்டுமின்றி கம்யூட்டர் சயின்ஸ் வரை படிப்புகள் உள்ளன. இவை அனைத்தும் தொழில் படிப்புகள். முடித்த உடனே வேலை கிடைக்கும். ஆரம்பத்தில் சம்பளம், 12 ஆயிரத்தில் துவங்கலாம். திறமையை வளர்த்துக் கொண்டால், 50 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் வாங்கலாம்.
பாலிடெக்னிக்குகள் ஆட்டோமேட்டிவ் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
கோவையில் உள்ள தொழில் நிறுவனங்களில் டிப்ளமோ படித்திருந்தால் ஆட்டோமோட்டிவ், சி.என்.சி., ஆபரேட்டர், மருத்துவம் சார்ந்த டிப்ளமோக்களுக்கு உடனே வேலை கிடைக்கிறது. பிளஸ் 2 முடித்தவுடன் எல்லோரும் டிகிரி படிக்க நினைக்கின்றனர். அதை முடித்து வேலை தேடுகின்றனர். டிப்ளமோ படிப்போருக்கு உடனே வேலை கிடைக்கிறது; தேவையும் உள்ளது. டிப்ளமோ படிப்புகளுக்கு கட்டணம் மிக குறைவு.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.