/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'பூஜ்யங்கள் இணைந்தாலும் ராஜ்யம் அமைக்க முடியாது' எம்.எல்.ஏ. ஜெயராமன் ஆவேசம்
/
'பூஜ்யங்கள் இணைந்தாலும் ராஜ்யம் அமைக்க முடியாது' எம்.எல்.ஏ. ஜெயராமன் ஆவேசம்
'பூஜ்யங்கள் இணைந்தாலும் ராஜ்யம் அமைக்க முடியாது' எம்.எல்.ஏ. ஜெயராமன் ஆவேசம்
'பூஜ்யங்கள் இணைந்தாலும் ராஜ்யம் அமைக்க முடியாது' எம்.எல்.ஏ. ஜெயராமன் ஆவேசம்
ADDED : நவ 01, 2025 06:48 AM
பொள்ளாச்சி: ''எத்தனை பூஜ்யங்கள் இணைந்தாலும் ராஜ்யம் அமைக்க முடியாது; சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்,'' என, எம்.எல்.ஏ. பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.
பொள்ளாச்சி அருகே, வடுகபாளையத்தில் எம்.எல்.ஏ., தொகுதி நிதியில் மேற்கொள்ள உள்ள வளர்ச்சிப்பணிகளை, எம்.எல்.ஏ. பொள்ளாச்சி ஜெயராமன் துவக்கி வைத்தார்.
பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
அ.தி.மு.க. மக்களுக்காக குரல் கொடுக்கும் இயக்கமாக உள்ளது. மற்ற கட்சிகள் எல்லாம், 'ஹோல் சேலாக' விலை போய்விட்டன. மக்களுக்கு பச்சை துரோகம் செய்யும் கட்சிகளாக மாறியுள்ளன. தி.மு.க. அரசு மது விற்பனையில் சாதனை படைப்பது தான் குறிக்கோளாக உள்ளது.
அனைத்து மது உற்பத்தி ஆலைகளும் நேரடியாக, மறைமுகமாக ஸ்டாலின் குடும்பத்துடன் தொடர்பில் உள்ளன. இதனால், மது விற்பனையை பெருக்கி, மதுக்கு இளைஞர்களை அடிமையாக்கி உழைக்கும் திறனை வீணாக்கி வருகின்றனர்.
இதை எதிர்த்து, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பழனிசாமி போராடுகிறார். அவருக்கு ஆதரவாக இரண்டரை கோடி தொண்டர்கள் தியாகம் செய்ய தயாராக உள்ளனர். அ.தி.மு.க. கட்சியை விட்டு சென்று துரோகம் செய்தவர்கள், கட்சியை விட்டு சென்றோர் இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போகின்றனர்.
நேற்றைய தினம் 'செல்லாமல் போனவர்கள்' ஒன்று சேர்ந்துள்ளனர். எத்தனை பூஜ்யங்கள் சேர்ந்தாலும், ராஜ்யம் அமைக்க முடியாது. அ.தி.மு.க. சோதனைகளை சந்தித்தாலும் மீண்டும் வீறு கொண்டு எழுந்து வெற்றிப்பாதையில் பயணிக்கும். வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, பழனிசாமி முதல்வராவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.
இவ்வாறு, அவர் கூறினார்.

