/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நகராட்சி நிர்வாக துறையில் ரூ.888 கோடி ஊழல்: சி.பி.ஐ., விசாரணைக்கு கிருஷ்ணசாமி வலியுறுத்தல்
/
நகராட்சி நிர்வாக துறையில் ரூ.888 கோடி ஊழல்: சி.பி.ஐ., விசாரணைக்கு கிருஷ்ணசாமி வலியுறுத்தல்
நகராட்சி நிர்வாக துறையில் ரூ.888 கோடி ஊழல்: சி.பி.ஐ., விசாரணைக்கு கிருஷ்ணசாமி வலியுறுத்தல்
நகராட்சி நிர்வாக துறையில் ரூ.888 கோடி ஊழல்: சி.பி.ஐ., விசாரணைக்கு கிருஷ்ணசாமி வலியுறுத்தல்
ADDED : நவ 01, 2025 06:48 AM
கோவை: நகராட்சி நிர்வாக துறையில் பணி நியமனத்தில் ஊழல் நடந்துள்ளதாக கூறப்படும் நிலையில், சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.
அவரது அறிக்கை:
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில், 2,538 உயர் பதவிகளுக்கான தேர்வு மற்றும் நியமனத்தில் ஏறக்குறைய ரூ.888 கோடி அளவிற்கு முறைகேடு நடந்துள்ளதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.
கடந்த, 2021ல் தி.மு.க., ஆட்சிக்கு வந்தது முதல் இந்து சமய அறநிலையத் துறை, கூட்டுறவுத் துறை, சத்துணவுத் துறை, கால்நடை பராமரிப்பு துறை, கல்வித் துறை, போக்குவரத்து துறை என, அனைத்து அரசுத் துறைகளிலும் நடந்த பணி நியமனங்களில் வெளிப்படைத்தன்மை இருந்ததில்லை என்பதே பரவலான குற்றச்சாட்டு.
ஓராண்டுக்கு முன்பு, தென்காசியில் ரேஷன் கடை ஊழியர் நியமனத்தில், தி.மு.க., மாவட்ட செயலாளர் அளித்த பட்டியல் தேர்வு செய்யப்பட்டு வெளியானதை சுட்டிக்காட்டிய பின், அப்போதைய மாவட்ட கலெக்டர் அப்பட்டியலை ரத்து செய்தார்.
இந்து சமய அறநிலையத்துறை கோவில்களில், அரசியல் தலையீடுகளாலேயே ஆயிரக்கணக்கான பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
தற்போது நகராட்சி நிர்வாக துறையில், 2,538 பணியிடங்களுக்கு, தலா ரூ.25 லட்சம் முதல், 35 லட்சம் வரை என, ஏறக்குறைய ரூ.888 கோடி லஞ்சம் பெறப்பட்ட பின்னரே பணி நியமனங்கள் நடந்திருப்பதாக, செய்தி வெளிவந்துள்ளது.
பணப்பரிமாற்றத்திற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும், அதனால் உடனடியாக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய, தமிழக டி.ஜி.பி.,க்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியுள்ளதாகவும் செய்தி வந்துள்ளது.
அவ்வாறு நடந்திருந்தால், அது மிகப்பெரிய ஊழல். இதுகுறித்து தமிழக காவல் துறை விசாரித்தால் முழு உண்மை வெளிவராது. எனவே, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

