/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'மொழிகள் பல இருந்தாலும் நம் சிந்தனை ஒன்று தான்'
/
'மொழிகள் பல இருந்தாலும் நம் சிந்தனை ஒன்று தான்'
ADDED : ஜூலை 22, 2025 10:20 PM

சூலுார்; முத்துக்கவுண்டன் புதூர் சுவாமி விவேகானந்தர் இளைஞர் சக்தி இயக்கம் சார்பில், மாதாந்திர விழிப்புணர்வு சொற்பொழிவு, விவேகானந்தர் அரங்கத்தில் நடந்தது.
'பாரதத்தில் மொழிகள் பல, உணர்வுகள் ஒன்றே' என்ற தலைப்பில், கொங்குநாடு கலை அறிவியல் கல்லுாரி உதவி பேராசிரியர் சந்தோஷ்குமார் பேசியதாவது:
நமது தேசத்தில் பல்வேறு மொழிகள் பேசப்பட்டாலும் மக்களின் தர்மம், பண்பாடு, வாழ்வியல் முறை, ஆன்மிக உணர்வுகள், குடும்ப வாழ்க்கை முறை, வழிபாட்டு முறைகள் ஒன்றேதான். ஒவ்வொரு நதியையும் அன்னையாக மதிக்கின்றோம். தாயை போற்றுவது போல், நமது நாட்டை தாய் நாடாகவும், மொழியை தாய் மொழியாகவும் போற்றுகிறோம். பனிரெண்டு ஜோதிர் லிங்கங்களும், அதன் தொன்மையும் பாரதத்தின் ஆன்மிக ஒற்றுமையை பறைசாற்றுகின்றது.
பல மொழிகள் பேசினாலும் நம்முடைய சிந்தனை ஒன்றுதான். அண்டை மாநிலத்தில் இயற்கை பேரிடர் ஏற்பட்டால், ஓடோடி சென்று உதவி கரம் நீட்டுகிறோம். அது நம் நாட்டின் ஒற்றுமையை வெளிப்படுத்துகிறது. மொழிகள் நம்மை பிரிப்பதாக இருக்க கூடாது. மாறாக மொழிகள் நம்மை இணைப்பதாக இருக்கவேண்டும். ராமாயணம், மகா பாரதம், விஷ்ணு புராணம் உள்ளிட்ட புராணங்கள், புற நானுாற்று பாடல்களில், நமது தேசத்தின் அறம், பண்பாடு, ஆன்மீக உணர்வுகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.
இவ்வாறு, அவர் பேசினார்.