/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குடிநீர் இயந்திரம் இருந்தும் பயணிகளின் தாகம் தீரலையே!
/
குடிநீர் இயந்திரம் இருந்தும் பயணிகளின் தாகம் தீரலையே!
குடிநீர் இயந்திரம் இருந்தும் பயணிகளின் தாகம் தீரலையே!
குடிநீர் இயந்திரம் இருந்தும் பயணிகளின் தாகம் தீரலையே!
ADDED : ஏப் 08, 2025 05:44 AM

கோவை; கோவை மாவட்டத்தின், முக்கிய போக்குவரத்து மையமாக இருக்கும் காந்திபுரம் நகர பேருந்து நிலையம், தினசரி ஆயிரக்கணக்கான பயணிகளால் பயன்படுத்தப்படுகிறது.
மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும், அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இந்நிலையத்திலிருந்து இயக்கப்படுவதால், வேலைக்குச் செல்வோர், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் என, பரபரப்பாக இயங்கி வருகிறது.
தினமும் குறைந்தது 5,000 பேர் வந்து செல்லும் இந்நிலையத்தில், பொதுமக்கள் வசதிக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது பாராட்டத்தக்கது. ஆனால், அவசரத்துக்கு உதவாமல் இருக்கிறது.
இதில், டம்ளர் போன்ற வசதிகள் இல்லாததால், பொதுமக்கள் பயனடைய முடியாமல் தவிக்கின்றனர். கையில் வாட்டர் பாட்டில் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே, இந்த இயந்திரம் பயன்படுகிறது.
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் சூழ்நிலையில், குழந்தைகள், பெரியவர்கள் என அனைத்து வயதினரும், குடிநீர் இயந்திரத்தை பயன்படுத்த முடியாமல் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.
பல லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட, இந்த குடிநீர் இயந்திரம் அவசரத்துக்கு பயன்படவில்லை என, பொதுமக்கள் வேதனைப்படுகின்றனர்.
மாநகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை துறைகள், உடனடியாக நடவடிக்கை எடுத்து, மக்கள் பயன்படத்தக்க வகையில், டம்ளர் மற்றும் பாட்டில் நிரப்பும் வசதிகளை, உடனே வழங்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்துகிறார்கள்.

