sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 அத்திக்கடவு திட்டத்தால் நீர் வந்தும் பயனில்லை! ஆகாயத்தாமரையால் பாழானது குளம்

/

 அத்திக்கடவு திட்டத்தால் நீர் வந்தும் பயனில்லை! ஆகாயத்தாமரையால் பாழானது குளம்

 அத்திக்கடவு திட்டத்தால் நீர் வந்தும் பயனில்லை! ஆகாயத்தாமரையால் பாழானது குளம்

 அத்திக்கடவு திட்டத்தால் நீர் வந்தும் பயனில்லை! ஆகாயத்தாமரையால் பாழானது குளம்

3


UPDATED : ஜன 06, 2026 09:09 AM

ADDED : ஜன 06, 2026 05:13 AM

Google News

UPDATED : ஜன 06, 2026 09:09 AM ADDED : ஜன 06, 2026 05:13 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னூர்: அத்திக்கடவு திட்டத்தின்படி நீர் வந்தும் கழிவு நீராலும், ஆகாயத் தாமரையாலும், அன்னூர் குளம் அலங்கோலமாக காட்சியளிக்கிறது.

அன்னூரில், மேட்டுப்பாளையம் சாலையில், பொதுப்பணி துறையின் கட்டுப்பாட்டில், 119 ஏக்கர் பரப்பளவு உள்ள குளம் உள்ளது.

இந்த குளத்திற்கு அன்னூரின் தெற்கு, மேற்கு மற்றும் வடக்கு பகுதியில் இருந்து மழை நீர் வருகிறது. இத்துடன் அத்திக்கடவு நீரும் வருகிறது.

குளத்தில், 50 சதவீதத்துக்கு மேல் மழை நீர் நிரம்பியுள்ளது. இந்நிலையில், கழிவுநீர், ஆகாயத்தாமரையால் குளம் அலங்கோலமான நிலையில் உள்ளதாக புகார் எழுந்துள்ளது.

சமூக ஆர்வலர்கள் கூறியதாவது :

பல ஆண்டுகளுக்குப் பிறகு, அன்னூர் குளத்தில், 50 சதவீதத்துக்கு மேல் மழை நீர் நிரம்பி உள்ளது. இதனால் சுற்று வட்டாரத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, விவசாய பரப்பு அதிகரித்துள்ளது. குடிநீர் பிரச்னை குறைந்துள்ளது. ஆனால் குளத்திற்கு கிழக்கு மற்றும் தெற்கு பகுதியில் இருந்து அதிக அளவில் கழிவு நீர் விடப்படுகிறது.

குழாய் பதிக்கப்பட்டு கழிவுநீர் குளத்தில் உள்ள நல்ல நீருடன் கலக்கிறது. இதே போல் கோழி கழிவுகளும், பேரூராட்சி கழிவுகளும் குளத்தில் கொட்டப்படுகின்றன.

குளத்தின் 50 சதவீத பகுதி ஆகாயத்தாமரையால் சூழப்பட்டுள்ளது. குளத்தில் உள்ள தண்ணீருக்கு இதனால், சூரிய வெளிச்சம் கிடைக்காமல், சிறு உயிரினங்கள் கூட உயிர் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நீர் மாசுபடுகிறது. 60 ஆண்டுகள் போராடி அத்திக்கடவு திட்டம் நிறைவேற்றி குளத்திற்கு அத்திக்கடவு நீர் வந்தும், பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

உடனடியாக குளத்திற்குள் கழிவு நீர் விடுவதை தடை செய்ய வேண்டும். குப்பை கொட்டாமல் இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us