/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'காட்டை பாதுகாக்கும் பொறுப்பு அனைவருக்கும் இருக்க வேண்டும்'
/
'காட்டை பாதுகாக்கும் பொறுப்பு அனைவருக்கும் இருக்க வேண்டும்'
'காட்டை பாதுகாக்கும் பொறுப்பு அனைவருக்கும் இருக்க வேண்டும்'
'காட்டை பாதுகாக்கும் பொறுப்பு அனைவருக்கும் இருக்க வேண்டும்'
ADDED : டிச 25, 2024 10:21 PM

கோவை; ''அனைவருக்கும் காட்டை பாதுகாக்கும் பொறுப்பு வேண்டும்,'' என, கோவை மண்டல வனப்பாதுகாவலர் வெங்கடேஷ் பேசினார்.
விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை, ஆனைமலை புலிகள் காப்பகம், மாநில வனப்பணிக்கான மத்திய உயர் பயிற்சியகம், ஓசை அமைப்பு சார்பில், இளம் பசுமை ஆர்வலர் பயிற்சி முகாம், கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மாநில வனப் பணிக்கான மத்திய உயர் பயிற்சியகத்தில் நேற்று நடந்தது.
கோவை மண்டல வனப்பாதுகாவலர் வெங்கடேஷ் பேசியதாவது:
காடுகள் எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது என்பதை அறிவது அவசியம். காட்டை பாதுகாக்கும் பொறுப்பு வேண்டும். காடு இல்லை எனில், காற்றும், நீரும் இருக்காது. காலநிலை மாறி வருகிறது. நீங்கள் நினைத்தால் மாற்றலாம். இயற்கையை பாதுகாக்க வேண்டும். மக்களிடம் இன்று இயற்கை குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் பேசினார்.
கால்நடை பராமரிப்பு துறை முன்னாள் கூடுதல் இயக்குனர் மனோகரன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த, பல்வேறு பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு, காடு குறித்த விளக்க உரை வழங்கப்பட்டது. 100 பறவைகள் குறித்த தகவல் குறிப்பேடு வழங்கப்பட்டது.

